லாக்டவுனில் கள்ளத்தனமாக மது விற்ற திரௌபதி நடிகர் ரிஸ்வான் கைது

கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 105 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்த எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இது தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் கள்ளச் சந்தையில் மதுபான விற்பனை ஜோராக நடந்துவருகிறது. அதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் கள்ளத்தனமாக மதுபானங்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த திரெளபதி பட துணை நடிகர் ரிஸ்வான் என்பவர் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 60க்கும் அதிகமான மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பல படங்களில் நடித்துள்ள ரிஸ்வான் இதற்கு முன்பு ஒரு பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணையில் அவர் அளித்த தகவல் அடிப்படையில் மேலும் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்தும் மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது பற்றி திரௌபதி பட இயக்குனர் மோகன்.ஜி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். “அவர் என் நண்பர் தான்.. பெயர் Rizwan Rizu.. நடிகர்.. பலகுரல் மன்னன்.. Sun music முன்னாள் Video jockey.. இது கண்டிக்கத்தக்க ஒரு செயல்.. இதற்கான தண்டனையை அனுபவிக்க போறார்.. நான் எதிர்பாராத ஒரு செய்தி இது..” என மோகன் தெரிவித்துள்ளார்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *