சார்லி சாப்லினாக மாறிய நேர்கொண்ட பார்வை நடிகை

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார் வித்யா பாலன். பாலிவுட் சினிமாவில் நடித்து பல விருதுகள் வாங்கியிருந்தாலும் தமிழ் சினிமாவில் இதுதான் அவருக்கு முதல் படம்.

வித்யா பாலன் அடுத்து சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். கால்குலேட்டர் மற்றும் கம்ப்யூட்டரை விட மிக வேகமாக கணக்குகளை போடக்கூடியவர் சகுந்தலா தேவி. அவரது கதாபாத்திரத்தில் தான் வித்யா பாலன் நடிக்கிறார். அனு மேனன் இயக்கும் இந்த பாடத்தினை சோனி நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் வித்யா பாலன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் உலகப்புகழ் பெற்ற காமெடி நடிகர் சார்லி சாப்ளின் போன்று தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார். சார்லி சாப்ளினின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகத்தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் அவர்.

5 வருடங்களுக்கு முன்னர் ஒரு மாத இதழுக்காக சார்லி சாப்ளின் தோற்றத்தில் போட்டோஷூட் நடத்தினாராம் வித்யா பாலன். அப்போது எடுத்த வீடியோ இது என விளக்கம் கொடுத்துள்ளார் அவர்.

“தனக்கு சரியாக ஞாபகம் இருந்தால், ஐந்து வருடத்திற்கு முன் போட்டோஷூட் நடத்தும்போது நான் போட்டோக்கள் எடுக்கும் முன்பு இப்படி சார்லி சாப்ளின் போல அடிக்கொண்டிருந்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *